×

புதுமணத் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநில புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, நேற்று தனது காரில் பதிந்தாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கான்வாயை திடீரென நிறுத்தினார். பின்னர் அவ்வழியாக வந்த புதுமணத் தம்பதிகளிடம் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். புதுமாப்பிள்ளையை ஆரத்தழுவி வாழ்த்திய முதல்வர், புதுமணப் பெண்ணுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். எப்போதும் திருமணம் நடந்தது? என கேட்டதற்கு சனிக்கிழமை என்று திருமண வீட்டார் முதல்வரிடம் தெரிவித்தனர். பின்னர், திருமண வீட்டார் சீராக கொண்டு வந்த இனிப்பையும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தார். அண்மையில் காபூர்தலாவில் மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாபின் பாரம்பரிய நடனமான பாங்கரா ஆடி மகிழ்வித்தார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post புதுமணத் தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Amritsar ,Punjab ,Saranjit Singh Sunny ,Bathinda ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...