×

போகலூர் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம்

பரமக்குடி, ஜன.8: போகலூர் ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை  ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார். போகலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி கிராமங்களான  பொட்டிதட்டி, மஞ்சூர், போகலூர் ஆகிய கிராமங்களில்  இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் பூமிநாதன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pokalur Union ,
× RELATED போகலூர் ஒன்றியத்தில் கிராம மக்களிடம் குறைகளை கேட்ட கலெக்டர்