×

சிக்கய்ய நாயக்கர் கல்லூரி: தமிழ்த்துறை மாணவிகள் பல்கலை கழக அளவில் சிறப்பிடம்

ஈரோடு:  பாரதியார் பல்கலைக்கழகத் தேர்வில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை மாணவிகள் முதல் 10 தகுதிகளில் 4 இடங்களைப் பிடித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு பாரதியார் பல்கலைகழகத் தேர்வில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, இளங்கலை தமிழ்த்துறை மாணவிகள் முதல் 10 தகுதிகளில் முதலிடம் உள்பட 4 இடங்களைப் பிடித்து பெருமை சேர்த்துள்ளனர்.

இதில், மாணவி தாமரைச்செல்வி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மாணவிகள் இந்துமதி,ரம்யா,அனிதா ஆகியோர் முறையே 6, 7, 9 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கமலக்கண்ணன், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தற்போது பயின்று வரும் இளங்கலை மாணவ, மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Chikkayya Nayakkar College ,
× RELATED ஸ்கூல் பேக், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை ஜோர்