சிவகாசி பஸ் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம்

சிவகாசி: சிவகாசியில் பழை பஸ் நிலையம் 2.5 ஏக்கர் பரப்பில் அமைக்க பட்டிருந்தது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் பழைய பஸ் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் நிலையம் விரிவு படுத்தபட்டது. இதில் 14 கடைகள்,ஊனமுற்றவர்கள் தங்கி செல்ல தனி அறை, டிரைவர்கள் ஓய்வு அறை என தனி தனியாக கட்டப்பட்டது. இருப்பினும் பஸ் நிலையத்தில் சுற்று சுவர், நவீன கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த படவில்லை.

நகராட்சி நூற்றாண்டு விழா சிறப்பு நிதியில் ரூ.6 கோடி மதிப்பில் மேலும் புதிய வணிக வளாகங்கள் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் புதிய கட்டிடங்கள், ேஹாட்டல், நவீன கழிப்பறை, சுற்றுச்சுவர் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. சிவகாசி பஸ் நிலையம் விரிவு படுத்த பட்டிருந்தாலும் போதிய கட்டிட வசதிகள் ஏற்படுத்த படவில்லை. அதேபோல் பயணிகள் வசதிக்காக நவீன கழிப்பறை, உணவு விடுதி வசதிகளும் ெசய்து தரப்பட வில்லை. தற்போது சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்த பட்டுள்ளதால் பஸ் நிலையத்தை நவீன படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு ெசய்ய பட்டுள்ளது.

நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவகாசி பஸ் நிலையத்தை மேலும் நவீன படுத்திட புதிய வணிக வளாகங்கள் கட்டவும், சுற்று சுவர் அமைக்கவும் ரூ.6 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கபடவுள்ளது. மாநகராட்சிக்கான அந்தஸ்தில் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

Related Stories: