பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு வாடகை பாக்கி 2 கடைகள் பூட்டி சீல் வைப்பு

திருவாரூர், ஜன. 6: திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு உரிய வாடகை பாக்கியினை செலுத்தாத 2 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. 30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகராட்சி பகுதியில் தெற்கு வீதி, பழைய பேருந்து நிலையம், கடைத் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் இருந்து வருகின்றன. இவற்றில் வணிக வளாகங்கள் இயங்கிவரும் நிலையில் அதற்கான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பல மாதங்களாக வாடகை செலுத்தாத வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டும் வாடகை தொகை செலுத்தாத பட்சத்தில் அந்த கடைகள் நகராட்சி கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் ஊழியர்கள் பூட்டி சீல் வைத்து வருகின்றனர். அதன்படி பழைய பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் 2 செல்போன் கடைகள் ரூ.4 லட்சத்திற்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ள நிலையில் அந்த 2 கடைகளையும் நகராட்சி மேலாளர் முத்துக்குமார் முன்னிலையில் ஊழியர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

Related Stories: