×

உத்தமபாளையத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். உத்தமபாளையம் பேரூராட்சியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம், பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவை மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. பெரியாற்றங்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், முறையாக குடிநீர் விநியோகம் இல்லை என கூறப்படுகிறது. இதை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த காலேஜ் ரோடு, பாறைமேடு, உ.அம்மாபட்டி விலக்கு ஆகிய பகுதி பொதுமக்கள் உத்தமபாளையம்-காலேஜ் ரோட்டில் திடீரென காலிகுடங்களை வைத்து சாலை மறியல் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தமபாளையம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Uththamapalaiyam ,
× RELATED உத்தமபாளையம் ஒன்றியக்குழு தலைவர்...