×

மிளகாய் செடியில் இலைப்பேன் தாக்குதல் தோட்டக்கலை துறை அறிவுறுத்தல்

கமுதி: கமுதி தாலுகாவில் மிளகாய் செடியில் இலைப்பேன் தாக்குதல் நோய் பரவி வருவதால், அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருந்து தெளித்து விவசாயிகள் பயனடைய வேண்டும் என தோட்டக்கலைத் துறை மாவட்ட துணை இயக்குநர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மிளகாய் பயிர்களை ஆய்வு செய்த பின்னர் அவர் கூறும்போது, கமுதி வட்டாரத்தில் பெருநாழி, என்.கரிசல்குளம், முதல்நாடு, முஸ்டகுறிச்சி, ராமசாமிபட்டி, புதுக்கோட்டை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகாய் விவசாயம் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மிளகாய் செடியில் கடந்த சில நாட்களாக இலைப்பேன் பூச்சி தாக்குதல் நோய் பரவி வருவதாக விவசாயிகள் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிகளில் மிளகாய் பயிர்கள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் இலைப் பேன் பூச்சி தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டது. மிளகாய் விவசாயிகள் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளின் அறிவுரை பெற்று இமிடாக்லோர்பிட் மருந்து தெளித்து, நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆய்வின் போது கமுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் குமார் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Chili ,
× RELATED பொய்யாநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டி யாகம்