தஞ்சை தமிழ் பல்கலைகழகம் துணைவேந்தருக்கு பாராட்டு விழா

திருவையாறு, ஜன.3: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக திருவள்ளுவன் கடந்த மாதம் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு திருவையாறு வடக்கு வீதியில் உள்ள அவ்வையார் ஆலயத்தின் முன்பு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா அவ்வை கோட்ட அறிஞர் பேரவையின் சார்பாக நடைபெற்றது. விழாவில் அவ்வை கோட்ட நிறுவனர் கலைவேந்தன் முன்னிலை வகித்தார். மூத்த மருத்துவர் நரேந்திரன் சிறந்த தமிழறிஞருக்கான செந்தமிழ் ஞாயிறு விருதினை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் பல்கலைக்கழக அறிவியல் துறை பேராசிரியர் இந்து, தென்னை ஆராய்ச்சியாளர் வ.செ.செல்வம், கவிமுகில், உடற்கல்வி ஆசிரியர் (ஓய்வு) கலியபெருமாள், புலவர் கலியபெருமாள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Stories: