×

பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் பெய்த மழையால் 28 ஏரிகள் நிரம்பியது

பெரம்பலூர், ஜன.3: பெரம்பலூர் மாவட்டத்தில் 2 நாள் பெய்த கனமழையால் 28 ஏரிகள் நிரம்பி வழிந்தன. 2 அணைக்கட்டுகளும் நிரம்பி வழிகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு சராசரி மழை அளவான 861 மீமி அளவைக் காட்டிலும் 56.93 மிமீ மழை அதிகம் பெய்து 1351.18 மிமீ மழை பதிவானது. இதனிடையே கடந்த 31ம் தேதி 164.மிமீ மழையும், 2022ஆம் ஆண்டு, ஜனவரி 1ம்தேதி 410மிமீ மழையும் என கன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக 1ம்தேதி நாள் முழுவதும் விட்டுவிட்டு கன மழை கொட்டியது. நாள் முழுக்க மாவட்டத்தின் மேற்கு எல்லையான பச்சை மலையில் பெய்த கனமழையால் கல்லாறு, வெள் ளாறு, மருதையாறு, சின்னாறு ஆகியவற்றில் தண்ணீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவமழை அதிகம் கொட்டித் தீர்த்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டிலுள்ள 73 ஏரிகள் மற்றும் விசுவக்குடி, கொட்டரை அணைக்கட்டுகள் 100 சதவீதம் நிரம்பி வழிந்தன.

இந்நிலையில் டிசம்பர்-31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி பெய்த கன மழையின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் லாடபுரம் பெரிய ஏரி, லாடபுரம் சின்ன ஏரி, களரம்பட்டி ஏரி, மேலப்பு லியூர் ஏரி, குரும்பலூர் பாளையம் ஏரி, செஞ்சேரி ஏரி, கண்ணாப்பாடி ஏரி, பொம் மனப்பாடிஏரி, செட்டிக்குளம் ஏரி, புதுநடுவலூர் ஏரி, தேனூர் ஏரி, நாரணமங்கலம் ஏரி, காரை பெரிய ஏரி, காரை சின்ன ஏரி, அரணாரை ஏரி, பெரம்பலூர் பெரிய ஏரி, பெரம்பலூர் கீழேரி எனப்படும் வெள்ளந்தாங்கியம்மன் கோவில் ஏரி, வரகுபாடி ஏரி, அய்யலூர்ஏரி, டி.களத்தூர் பெரிய ஏரி, டி.களத்தூர் சின்ன ஏரி, வெங்கலம் பெரிய ஏரி, வெங்கலம் சின்ன ஏரி, தெரணி ஏரி, செங்குணம் ஏரி, கீழப்புலியூர் ஏரி, ெதுறைமங்கலம் பெரிய ஏரி, துறைமங்கலம் சின்னஏரி என மொத்தம் 28 ஏரிகள் மீண்டும் நிரம்பி வழியத்தொடங்கியுள்ளன. இதனால் பலவிவசாயிகள் மகிழ்ச்சியிலும், அறுவடை செய்யவுள்ள விவசாயிகள் திண்டாட்டத்திலும் உள்ளனர்.

Tags : Perambulur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...