×

காயல்பட்டினத்தில் மினி மாரத்தான் போட்டி

ஆறுமுகநேரி, ஜன.3: காயல்பட்டினத்தில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடந்தது. தமிழகத்தில் பெருகி வரும் போதைப் பழக்கத்தை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமுமுக மாணவர் அமைப்பான சமூக நீதி மாணவர் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காயல்பட்டினத்தில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் 230 பேர் பங்கேற்றனர். போட்டியை அப்துல்சமது எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டியில் முதலிடம் பெற்ற விவேக்கிற்கு ரூ.4ஆயிரமும், 2வது இடம் பிடித்த சொளுக்குவிற்கு ரூ.3ஆயிரமும், 3வது இடம் பிடித்த வனராஜாவுக்கு ரூ.2ஆயிரமும் மேலும் 20 பேருக்க ஆறுதல் பரிசுகளையும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற 50வயதிற்கு மேற்பட்ட 4 பேர் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் நகர தமுமுக தலைவர் ஜாகீர்உசேன், மமக மாநில துணை பொதுச்செயலாளர் ஜோசப் நெலஸ்கோ, மாவட்டத் தலைவர் ஆசாத், செயலாளர் ஹஸன், உறுப்பினர் செய்யது ஐதுரூஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Mini Marathon ,Kayalpattinam ,
× RELATED காயல்பட்டினத்தில் பட்டப்பகலில்...