செங்கம், ஜன.3: செங்கம் நகரில் பெருமாள் கோவில் தெருவில் திடீரென இறைச்சி கடை ஒன்று திறக்கப்பட்டது. அதனைப் பார்த்த பக்தர்களும் அப்பகுதி பொதுமக்களும் உடனடியாக வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் மற்றும் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் சிவன் கோவில், வீர சுந்தர ஆஞ்சநேயர் கோயில் உள்ள பகுதி. மாடவீதி, தேரோட்டம் நடைபெறும் பகுதி என்பதால் இங்கு இறைச்சி விற்பனைக்கு ஏதுவான இடம் இல்லை என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இறைச்சிக் கடையினை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் மாற்றி வைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
