சிவகாசியில் சாலையோர மணலால் வாகன ஓட்டிகள் அவதி

சிவகாசி, ஜன. 1: சிவகாசி நகராட்சி பகுதியில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் சாலைகள் ஆக்கிரமிப்புகளால் மிகவும் குறுகளாக உள்ளது. புறநகர் பகுதி சாலைகளான விருதுநகர், சாத்தூர், திருவில்லிபுத்தூர சாலைகள் தற்போது அகலபடுத்த பட்டு வருகிறது. சிவகாசி நகருக்குள் உள்ள சாலைகளில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று விலகி செல்லும் போது புழுதி பறக்கிறது. டூவிலரில் செல்வோர் புழுதியால் அவதிப்படுகின்றனர். சாலை ஓரத்தில் குவிந்து கிடக்கும் மண் குவியலால் பஸ், லாரி, கார்கள் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் மணல் மேட்டில் சரிந்து கிழே விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இது போன்ற நேரங்கிளில் பஸ், லாரி போன்ற வாகனங்களின் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் நடக்கிறது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் மணல் மேடுகளை அகற்ற நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: