×

லாரி மோதி வியாபாரி பலி

வத்தலக்குண்டு, ஜன. 1: நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்ததை சேர்ந்தவர் கூலுச்சாமி (57). இவர், நிலக்கோட்டை சுற்றுப்புற கிராம பகுதிகளில் சைக்கிளில் தினசரி தக்காளி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது கிராமத்திலிருந்து வியாபாரம் செய்வதற்காக, சைக்கிளில் அணைப்பட்டி-நிலக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலக்கோட்டை அருகே, கோட்டை பகுதியில் பின்னாடி வந்த லாரி சைக்கிளில் மோதியதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். லாரியின் பின்புற சக்கரம் உடலில் ஏறி கூலுச்சாமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags : Larry ,
× RELATED ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மருத்துவ மாணவன் தற்கொலை