×

ஒன்றிய அரசை கண்டித்து திருச்செங்கோட்டில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, டிச. 28: திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தா ஒன்றிய அரசை வலியுறுத்தி, சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜவுளி உற்பத்திக்கு அடிப்படையான நூல் விலை தினமும் உயர்ந்து வருவதால், 3 லட்சம் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் சுமார் 10 லட்சம் விசைத்தறி தொழிலாளர் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் ஒன்றிய அரசு, ஜவுளிக்கான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக உயர்த்தி இருப்பதை கண்டித்து, சூரியம்பாளையம், கைலாம்பாளையம், கொல்லப்பட்டி, குமரமங்கலம், சட்டையம்புதூர், ராஜாக்கவுண்டம் பாளையம், காந்திநகர், செங்கோடம்பாளையம், கோம்பைநகர், கொக்கராயன்பேட்டை, தோக்கவாடி, தேவனாங்குறிச்சி, ஆனங்கூர் பகுதிகளை சேர்ந்த 13 சிறு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் காயத்ரி சுப்பிரமணி, குப்புசாமி, கார்த்திகேயன், செல்லப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். நிர்வாகி காயத்ரி சுப்பிரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஒன்றிய அரசு கடந்த 1.01.2020 முதல் காட்டன் துணிகளுக்கு 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் 2 வருடம் தொழில் நசிந்துபோயுள்ள நிலையில், தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்தவே வழியில்லாத நிலையில் சிரமப்படுகின்றனர். நூல் விலை 60 சதவீதம் உயர்ந்து தொழிலை பாதித்துள்ளது. ஒன்றிய அரசு , மாதம் ஒருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்,’ என்றார்.

Tags : Tiruchengode ,United Kingdom ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்