×

கொட்டாம்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம்

மேலூர், டிச.28: கொட்டாம்பட்டி அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  கொட்டாம்பட்டி அருகே பூமங்கலப்பட்டி கிராமத்தில் அரசு சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம், மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார், மதுரை உதவி இயக்குநர் சரவணன் ஆகியோரின் ஆலோசனைபடி நேற்று நடைபெற்றது. இம்முகாமில் கொட்டாம்பட்டி கால்நடை மருந்தக பொறுப்பு கால்நடை உதவி மருத்துவர் ஆறுமுகம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சேதுராமன், பழனிமுத்து கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

முகாமில் தன்னார்வல கால்நடை மருத்துவர் முரளிதரன், வார்டு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். சிறப்பு முகாமில் கன்றுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசியும், கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை, மாடுகளுக்கு சினை பரிசோதனை மற்றும் கருவூட்டல் ஆகிய அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சிறந்த மேலாண்மை முறைகளை பின்பற்றி வரும் 3 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த கன்றுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய எளிமையான பராமரிப்பு குறித்து கால்நடை துறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags : Veterinary Camp ,Kottampatti ,
× RELATED சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்