திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு 40 டன் மீன்கள் விற்பனைக்கு வருகை

திருப்பூர், டிச.27: திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு 40 டன் மீன்கள் விற்பனைக்கு நேற்று வந்தது. திருப்பூர் - பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் காய்கறி மற்றும் மீன்கள் விற்பனை செய்யப்படும். விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். மீன்கள் மற்றும் காய்கறி விற்பனை நன்றாக நடைபெறும். இந்த நிலையில் நேற்று சந்தைக்கு 40 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மீன்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. மீன்கள் வரத்து குறைவால் நேற்று அதன் விலைகளும் உயர்ந்து இருந்தது.

அதன்படி பாறை மீன் ஒரு கிலோ ரூ. 350-க்கும், விளமீன் ரூ.350-க்கும், சங்கரா ரூ.200-க்கும், அயிளை ரூ.180-க்கும், மத்தி ரூ.120-க்கும், நண்டு ரூ.400-க்கும், வஞ்சரம் ரூ.800-க்கும், இறால் ரூ.400-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், முறல் ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: