×

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், ஸ்ரீகாஞ்சி சண்டிஹோம அறக்கட்டளை, ஸ்ரீ கல்யாண காமாட்சி அறக்கட்டளை சார்பில் மகா சண்டி யாகம் நடந்தது. இதில், மலர்கள், காய், கனிகள், இனிப்பு வகைகள் மற்றும் மாங்கல்யம் போன்றவை வைக்கப்பட்டு சிறப்பு யாக சாலை பூஜை நடத்தப்பட்டது. பின்னர், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, வடுக பூஜை போன்றவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் மாங்கல்யம், மஞ்சள், குங்குமம், ரவிக்கை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட்டனர்.

Tags : Maha Chandi Yagya ,Kamatchi Amman Temple ,Kanchipuram ,
× RELATED காஞ்சிபுரம் அருகே பெண் காவலரை வெட்டிய சம்பவத்தில் கணவன் கைது!!