×

நெல்லை மாநகர பகுதியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பு

நெல்லை,டிச.27: நெல்லை மாநகர பகுதியில் ஓமிக்ரான் வைரசை கட்டுப்படுத்த கடந்த 16ம் தேதி முதல் பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை பகுதியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணித்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.  நமது நாட்டில் பல பகுதிகளில் மரபு திரிந்த கொரோனா வகை ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலை காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தம் விதமாக நெல்லை மாநகர எல்கைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் முககவசம் அணிவது கடந்த 16ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் தங்கள் நலனை காத்துக்கொள்வதோடு மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக முகக்கவசம் அணிந்தும் சமூக விலகலை கடைபிடித்தும் போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

 மேலும் மாநகர பகுதிக்குள் முககவசம் அணியாமல் பொதுமக்கள் வருவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது அபராதத்துடன் கூடிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முககவசம் அணியாமல், சமூக விலகலை கடைபிடிக்காத வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக வளாகங்களை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைகண்ணன் எச்சரித்திருந்தார். இதைத்தொடர்ந்து மாநகர போலீசார் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும் போது முககவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தினர். இருந்த போதும் நெல்லை மாநகர பகுதிகளில் பொதுமக்கள் முககவசம் அணியாத நிலை காணப்பட்டது. இதைதொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் உத்தரவின் பேரில் மாநகர துணை கமிஷனர் சுரேஷ்குமார் அறிவுரையின் படி நெல்லை வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட், கொக்கிரகுளம், டவுன் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும், பொது இடங்களில் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மீதும் அபராதம் விதித்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், முககவசம் அணியாவர்களுக்கு நேற்று காலையில் போலீசார் ரூ.100 அபராதம் விதித்தனர்.

Tags : Nellai ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...