கிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா

கோவை, டிச. 25:  கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜேனட் வரவேற்றார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ-மாணவிககளுக்கு கேக் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கினார். மேலும் அவர் பேசுகையில், ‘’மாணவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கற்க வேண்டும். தொழில் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள். உலக மாற்றத்துக்கு ஏற்ப, உங்களை மேம்படுத்திக்கொள்ளுங்கள். போட்டிகளையும், சவால்களையும் எதிர்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். இது, உங்களது வாழ்க்கையை மேம்படுத்தும்’’ என்றார்.

Related Stories: