×

தஞ்சைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை அரசு விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணி

தஞ்சை, டிச.25: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 30ம் தேதி அரசு விழாவில் பங்கேற்கிறார். இதற்கான விழா பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்கு தஞ்சைக்கு வருகிறார். மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது சிலைகளை திறந்து வைக்கிறார்.

பின்னர் மறுநாள் 30ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு சார்பில் மக்களை தேடி முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உத்தரவுகளையும் விழாவில் முதல்வர் வழங்குவார். தேர்தலுக்கு முன்பாகவே மக்களை தேடி வந்து மனுக்களை பெற்ற நிலையில், தற்போது முதல்வராக மக்களை தேடி வந்து நலத்திட்டங்களை வழங்குகிறார். முதல்வரின் வருகையை மிகுந்த ஆர்வத்துடன் தஞ்சாவூர் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின் போது அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி. நீலமேகம், சரக டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்.பி., ரவளிப்பிரியா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Thanjavur ,
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...