×

அட்மா திட்டத்தின் கீழ் நெல் நடவில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி வகுப்பு

தா.பழூர்,டிச.25: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராமத்தில் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள நெல் நடவில் அட்மா திட்டத்தின் கீழ் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி கூட்டம் வேளாண் உதவி இயக்குனர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் வரவேற்றார்.

இதில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப மேலாண்மை குறித்து கிரீடு வேளாண் அறிவியல் மைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமார் கூறுகையில் நெல் நடவில் பாக்டீரியா இலைக் கருகல் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதற்கு தீர்வு தரும் விதமாக என்னென்ன நடவடிக்கை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என விளக்கமாக உரை நிகழ்த்தினார். பயிற்சியின் நிறைவாக உதவி தொழில்நுட்ப மேலாளர் லட்சுமி நன்றி கூறினார். இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் செய்திருந்தார்.

Tags :
× RELATED பாளையம் புனித யோசேப்பு ஆலய