×

மாவட்ட அளவிலான ஹாக்கி அருப்புக்கோட்டை எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி சாதனை

அருப்புக்கோட்டை, டிச. 24: ராஜபாளையம் யாழினி ஹாக்கி கிளப் சார்பில் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட அளவிலான 21 வயதிற்குட்பட்ட செவன்ஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ராஜபாளையம், எஸ்எஸ் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் அருப்புக்கோட்டை எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலாவது ஆட்டத்தில் ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி அணியை 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கால் இறுதி ஆட்டத்தில் ராஜபாளையம் டெஸ்ட் பிரண்ட் ஹாக்கி கிளப் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அரையிறுதியில் விருதுநகர் காமராஜர் ஹாக்கி அகடாமி அணியிடம் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ராஜபாளையம் ஜெய்பீம் ஹாக்கி அகடாமி அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வென்று 3ம் இடத்திற்கான கோப்பையையும், ரொக்க பரிசாக 3 ஆயிரம்
ரூபாயை 21 வயதிற்குட்பட்டோருக்கான இந்த ஹாக்கி போட்டியில் 16 வயது நிரம்பிய எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி ஹாக்கி அணியினர் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற ஹாக்கி அணி வீரர்களையும், உடற்கல்வி இயக்குநர் சவுந்திரபாண்டியன், உடற்கல்வி ஆசிரியர்கள் சரத்குமார், கணேஷ்குமார், சுரேஷ், முருகதாஸ் ஆகியோர்களை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலாளர் காசிமுருகன், தலைவர் ஜெயகணேசன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் ஆகியோர் பாராட்டினர்.

Tags : District Level Hockey ,Aruppukottai ,SPK ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்