×

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்

 

அருப்புக்கோட்டை, மார்ச் 1: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் இன்று திமுக சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அருப்புக்கோட்டை நகர திமுக சார்பில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழிகாட்டுதலின் படி அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம் சிந்தனை மாளிகை மற்றும் தமிழன் பகுத்தறிவு மன்றம் ஆகிய இடங்களில் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சியும், சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், நேதாஜி ரோடு வள்ளலார் கோவில், மதுரை ரோடு சிஎஸ்ஐ பள்ளி ஆகிய இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை நகர திமுகவினர் செய்துள்ளனர்.

The post மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம் appeared first on Dinakaran.

Tags : M.K.Stal ,Aruppukottai ,Tamil Nadu ,Chief Minister ,DMK ,Minister ,Sathur Ramachandran ,Aruppukkottai ,
× RELATED வெப்ப அலை வீசும் என வானிலை எச்சரிக்கை...