×

நாகை கீச்சாங்குப்பத்தில் அரசு பள்ளி கட்டிடத்தை அதிகாரி ஆய்வு

நாகை, டிச.24: நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இணை இயக்குநர் பாஸ்கரசேதுபதி ஆய்வு செய்தார். திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் இறந்தனர். இதையடுத்து பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பள்ளிகல்வி துறையைச் சேர்ந்த அதிகாரிகளை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி நாகை மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இணை இயக்குநர் பாஸ்கரசேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாகை கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை ஆய்வு செய்ய வந்தார். அப்போது பள்ளிக்கட்டிடங்கள், வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவர் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் பள்ளி மாணவர்களின் கல்விதரத்தை கற்பிக்க செய்து சோதனை செய்தார். தொடர்ந்து பஞ்சாயத்தார்கள் ரவி, தேசிங்கு, காசாளர் மூர்த்தி, அக்கரைப்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தமிழ்வாணன் ஆகியோரிடம் பள்ளி வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை கேட்டறிந்தார். ஆய்வு அலுவலருடன் முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன், உதவி திட்ட அலுவலர் பீட்டர்பிரான்சிஸ், தலைமை ஆசிரியர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் வீரமணி நன்றி கூறினார்.

Tags : Nagai Kichchankuppam ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு