×

அரியலூர் கே.வி.எஸ்.மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் திறப்புவிழா

அரியலூர்,டிச.24: அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள கே.வி.எஸ்.மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் நிறுவப்பட்டு அதன் திறப்புவிழா நடந்தது. உரிமையாளர்கள் டாக்டர்கள் வெ.செந்தில்நாதன், டாக்டர் க.அனுமைத்ரேயி ஆகியோர் விழாவிற்கு வந்த அனைவரையும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்து ஸ்கேன் மையத்தை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் கு.சின்னப்பா எம்எல்ஏ, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் எம்எல்ஏ, மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் தெய்வஇளையராஜன், அரசு வழக்கறிஞர் த.ஆ.கதிரவன், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சி.சின்னதம்பி, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இராம.மனோகரன், கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏ.ஆர்.அமுதன், குளோபல் இன்போ சிஸ்டம் த.தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : MRI Scan Opening ,Ariyalur ,KVS Hospital ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் 10ம்தேதி மக்கள் குறைதீர் கூட்டம்