ஆருத்ரா தரிசன விழா

திருச்சுழி, டிச.22: திருச்சுழியில் திருமேனிநாதர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழாவை முன்னிட்டு மூலவர் உலாவீதி  நடைபெற்றது. வருடாவருடம் மார்கழி மாதம் வரும் திருவாதிரை தினத்தில் விரதம் கடைபிடித்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி தமிழக முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சுழியில் உள்ள பழமை வாய்ந்த  திருமேனிநாதர் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருமேனிநாதர், சகாயவள்ளி சுவாமிகள் வீதியில் உலா வந்து பக்தர்கள் காட்சியளித்தனர். ஆருத்ரா விழாவில் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: