ஊட்டி - மைசூர் சாலையில் பள்ளங்களை மூட கோரிக்கை

ஊட்டி, டிச.22: ஊட்டியில் இருந்து கூட்செட், ஹில்பங்க் வழியாக கூடலூர், கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இச்சாலையில், கூட்செட் முதல் ஹில்பங்க் செல்லும் சாலையில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களை தவிர்த்து செல்வதற்காக வாகன ஓட்டுநர்கள் தாறு மாறாக வாகனங்களை இயக்குகின்றனர். இது போன்ற சமயங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.

குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பள்ளங்களில் வாகனங்களை இறக்கி செல்லும் போது பழுதடைகிறது. மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளங்களில் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது.

எனவே, கூட்செட் முதல் ஹில்பங்க் வரை உள்ள சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: