×

காந்திபேட்டையில் சாலை சேதமான பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

ஊட்டி, டிச.22: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மஞ்சூர் பகுதிக்கு செல்ல லவ்டேல் வழியாக சாலை உள்ளது. இச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மஞ்சூர், அதிகரட்டி, கிண்ணக்கொரை, கெத்தை உள்ளிட்ட போன்ற பகுதிகளுக்கு சென்று வர கூடிய அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இந்த சாலை வழியாகவே சென்று வருகிறது.  

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பெய்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் மண் சரிவுகள், மரம் விழுதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டன. இவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டன. மழை காரணமாக மஞ்சூர் சாலையில் கொல்லிமலை செல்லும் சாலை பிரிவு அருகே சாலை சேதமடைந்துள்ளது. அதிக பாரம் ஏற்றி செல்ல கூடிய வாகனங்கள் சென்றால் பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் அங்கு வாகனங்கள் செல்லாதவாறு மண் மூட்டைகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வழியாகவே வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, இப்பகுதியில் உடனடியாக தடுப்புச்சுவர் கட்ட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Gandhipet ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்