×

திருவாதிரை திருவிழா கோலாகல தேரோட்டம்

சிவகாசி. டிச. 21: சிவகாசியில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. சிவகாசியில் மார்கழி மாத முக்கிய விழாவான திருவாதிரைத் திருவிழா நேற்று நடைபெற்றது. சிவகாசி சிவன் கோயில், முருகன் கோயில், கடைக் கோயிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்றது. சிவன் கோயிலில் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்திலேயே பக்தர்களுக்கு உலாவந்து காட்சியளித்தார். முருகன்கோயில் மற்றும் கடைக்கோயிலிலிருந்து சுவாமிகள் மஞ்சள் செவ்வந்திப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தனர். திருவாதிரைத் திருவிழாவையொட்டி சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Thiruvathirai Festival Golagala Therottam ,
× RELATED தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்