×

பவாணீஷ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம், தேர்பவனி

ஊட்டி, டிச. 21:  ஊட்டி பெர்ன்ஹில் பவாணீஷ்வரர் கோயிலில் 110ம் ஆண்டு ஆருத்ரா தரிசன மஹோற்சவம் மற்றும் தேர்பவனி நேற்று நடந்தது.  ஆண்டு தோறும் ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் பவாணீஷ்வரர் ேகாயிலில் அமைந்துள்ள ஸ்ரீ நடராஜமூர்த்தி, ஸ்ரீ சிவகாமசுந்தரேஷ்வரி ஆருத்ரா தரிசன மஹோற்சவம் விமரிசியாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு நேற்று முன்தின்தினம் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு கணபதி, சூரியபகவான் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து 2 மணிக்கு நடராஜர் அபிஷேகம், சிறப்பு ேஹாமம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு பூர்ணாஹூதி, மகா தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. பகல் 12.30 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

மாலை 5.30 மணிக்கு பிரசாதம், இரவு 7.30 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று தேர்பவனி நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு துவங்கிய இந்த தேர்பவனி மினிக்கிசோலை, பெர்ன்ஹில், மத்திய பஸ் நிலையம், லோர் பஜார் வழியாக ஊட்டி மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. தோடர் பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடராஜரை நகர் வலம் அழைத்து வந்தனர். தொடர்ந்து ஐந்து லாந்தர் பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், கமர்சியல் சாலை வழியாக காப் அவுஸ் சதுக்கம் தேர் கொண்டுச் செல்லப்பட்டு, பின்னர் பவாணீஷ்வரர் கோயிலுக்கு கொண்டுச் செல்லப்பட்டது. தேர் பவனியின் போது, ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் காந்தராஜ் மற்றும் தோடர் பழங்குடியின மக்கள் செய்திருந்தனர்.

Tags : Arudra Darshan ,Bhavanishwarar Temple ,Therpavani ,
× RELATED காவேரிப்பட்டினத்தில் அங்காளம்மன்...