×

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர், டிச.21: காவல் துறை, வனத்துறை, நீதித்துறையில் வேலை வாங்கித்தருவதாக 150 பேரிடம் ₹5 கோடி வரையில் மோசடி செய்துள்ளதாக, அதிமுக முன்னாள் கவுன்சிலர், ஓய்வு பெற்ற போலீஸ் உட்பட 3 பேர் மீது ேவலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

சேர்க்காடு இருளர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 25 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கு 1980ம் ஆண்டு குடியாத்தம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மூலம் 77 ெசன்ட் நிலம் சென்ட் நிலம் ஆர்ஜிதம் செய்து வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வீடு கட்டி வசிக்க முடியவில்லை. எனவே, எங்களது இடத்தில் புதிய வீட்டுமனை பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டித்தரவேண்டும், என்றனர்.
வேலூர் மாவட்ட விளையாட்டு சங்கம் சார்பில் அளித்த மனுவில், காட்பாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், என்றனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், கணியம்பாடி, நெல்வாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வேலூருக்கு பஸ்வசதி இல்லாமல் உள்ளது. கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும். என்றனர்.

வேலூர் அடுத்த பெரிய சித்தேரி பகுதி மக்கள் அளித்த மனுவில், சித்தேரியில் இருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கும், திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கும் செல்ல பஸ் வசதி இல்லை. வேலூரில் இருந்து புத்தூர் செல்லும் 8 இ அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சை மீண்டும் இயக்கவேண்டும். ஓய்வு பெற்ற ஆர்பிஎப் வீரர் வாசுதேவன் கொடுத்த மனுவில், சித்தேரி பகுதியில் ராமர் பஜனை கோயிலுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், திருப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட சுமார் 5 மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனு அளித்தனர். அதில், வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் அருகே வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் தங்கராஜ், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த சதீஷ்குமார், அதிமுக முன்னாள் கவுன்சிலர் குமரேசன் ஆகியோர், தங்களுக்கு தலைமை செயலகத்தில் அதிகாரிகளை தெரியும். காவல்துறை, வனத்துறை, நீதித்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறினார். அதனை நம்பி நாங்களும், ₹3.50 லட்சம் முதல் ₹5 லட்சம் வரையில் பணத்தை கொடுத்தோம். அதற்கு போலி பணிநியமன ஆணையினை வழங்கி ஏமாற்றிவிட்டார். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் 150க்கும் ேமற்பட்டவர்களிடம் ₹5 கோடி வரையில் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். எனவே எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். தொடர்ந்து மாற்றத்திறனாளிகள் அளித்த பல்வேறு ேகாரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மாற்றுத்திறனாளிகள் நல அலவலருக்கு உத்தரவிட்டார்.

Tags : Velur Collector's Office ,
× RELATED வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக...