பண்ைண சாரா கடனுக்கான ஒருமுறை கடன் தீர்வு காலம் நீட்டிப்பு

ஊட்டி,டிச.20: தொடக்க வேளாண்மை வங்கிகளில் தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கான ஒருமுறை கடன் தீர்வு செயலாக்க காலம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன் கூறியிருப்பதாவது, நீலகிரி மண்டலத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை தவணை தவறிய பண்ணை சாரா கடனுக்கான ஒருமுறை கடன் தீர்வு செயலாக்க காலம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 10 உறுப்பினர்கள் (கோத்தகிரி தொடக்க வேளாண்மை மற்றம் ஊரக வளர்ச்சி வங்கியின் 4 உறுப்பினர்கள் மற்றும் கூடலூர் தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் 6 உறுப்பினர்கள்) மொத்தம் ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் அசல் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டிய தொகையாகும்.

அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏற்கனவே 25 சதவீதம் செலுத்தி உள்ள கடன்தாரர்கள் மீதமுள்ள 75 சதவீதம் தொகை செலுத்துவதற்கு ஏதுவாகவும் மற்றும் இதுவரை இந்த திட்டத்தில் சேராதவர்கள் உடனடியாக இத்திட்டத்தில் சேர்ந்து ஒரே தவணையில் முழுமையாக சம்பந்தப்பட்ட வங்கிகளில் கடனை திருப்பி செலுத்தி பயன் அடையலாம்.

Related Stories: