×

மாவட்ட திமுக., சார்பில் பேராசிரியர் அன்பழகனின் 100வது பிறந்தநாள் விழா

ஊட்டி,டிச.20: மறைந்த பேராசிரியர் அன்பழகனின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட திமுக., சார்பில் மாவட்ட செயலாளர் முபாரக்கின் ஆலோசனைப்படி, ஊட்டியில் உள்ள மாவட்ட திமுக., அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அவர்கள் தலைமையில், பேராசிரியரின் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்கள் தொரை, பரமசிவன், உதயதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட அமைப்பாளர்கள் காந்தள் ரவி, எல்கில் ரவி, தேவராஜ்,  மாவட்ட பிரதிநிதி ராஜா, நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், பேரூர் கழக செயலாளர்கள் பாபு, பிரகாஷ்குமார், முத்து, தொமுச., மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், தியாகு, குண்டன், பெள்ளன், செல்வன்,  பர்னபாஸ், குமார், மாதன், குரூஸ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.

Tags : Prof. ,Anpalagan ,District DMK ,
× RELATED கவுன்சலிங் ரூம்