பரமக்குடியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்: முருகேசன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பரமக்குடி, டிச.18: பரமக்குடி அருகே உள்ள தெளிச்சத்தநல்லூர் கிராம ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு தெளிச்சத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் முத்துச்சாமி, மண்டல இணை இயக்குனர் ஏஞ்சலா, பரமக்குடி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சந்திரசேகர் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் முகாமினை தொடங்கி வைத்தார். பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் முகாமில் கலந்து கொண்டன. கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்த முகாமில்  நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சேவியர், கால்நடை உதவி மருத்துவர்கள் பூபதி, சீதாலட்சுமி, பரமக்குடி நகர் தெற்கு பொறுப்பாளர் சேதுகருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் சேதுபதி, உள்பட கால்நடைத்துறை மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: