திருமயம் பகுதி விவசாயிகளுக்கு நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில் மரக்கன்று வழங்கல்

திருமயம், டிச.18: திருமயம் பகுதி விவசாயிகளுக்கு, தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மானாவாரி மேம்பாட்டு பகுதிக்கான ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமையில் திட்டபயனாளிகளுக்கு பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கினார். அப்போது பேசிய அவர், இத்திட்டத்தின் மூலம் வேளாண்மை தவிர்த்து இதர உப தொழில்களில் வருமானங்களை ஈட்ட குறுகிய காலத்தில் வளர்ந்து பயன் தரும் பழ மரங்கள் வளர்த்தும் நீண்டகாலம் வளர்ந்து பயன் தரும் தேக்கு மரங்களையும் வளர்த்து விவசாயிகளை பயனடைய வேண்டும் என்றார். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உமா பயனாளிகளுக்கு திட்டத்தின் நோக்கம், பங்களிப்பு, பராமரிப்பு முறைகள் குறித்து எடுத்து கூறினார்.

இதனைத் தொடர்ந்து திருமயம் வனசரக அலுவலர் சவேரிஆரோக்கியராஜ் கன்றுகள் பராமரிப்பு, நடவுமுறைகள் குறித்து பேசினார். திட்டப் பயனாளிகளை வேளாண்மை அலுவலர் புனிதவதி, இளநிலை ஆராய்ச்சியாளர் நித்யா, ஆகியோர் தேர்வு செய்திருந்தனர். ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரெங்கராஜ், பத்மபிரியா, அருண்மொழி, ஜீவிதா, திவ்யாஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: