×

ஆதார் கார்டு திருத்த பணிகள் செய்ய முடியாமல் மக்கள் அவதி பெரம்பலூர் மாவட்டத்தில் 1 நகராட்சி, 4 பேரூராட்சி தேர்தல் 81 பதவிகளுக்கு போட்டியிட விருப்பமனு

பெரம்பலூர், டிச.17: பெரம்பலூர் மாவட்டத்தில் 1 நகராட்சி, 4 பேரூராட்சிகளில் உள்ள 81 பதவிகளுக்கு போட்டியிட மாவட்ட திமுக அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தனர். இன்று கடைசி தேதியாகும். தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலு ள்ள பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய 4 பேரூராட்சிகளில் தலா 15 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என 60 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 81 பதவியிடங்களுக்குத தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதியின்பேரில், அனைத்து மாவட்ட திமுக கட்சி அலுவலகங்களிலும் நேற்றும் (15ம்தேதி), இன்றும் (16ம்தேதி) விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி வார்டு உறுப்பினர்களில் பொதுவினருக்கு ரூ.5ஆயிரமும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ.2,500ம், பேரூராட்சி வார்டு உறுப்பினரில் பொதுவினருக்கு ரூ.2500மும், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ.12,50ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மேற்கண்ட 81 பதவியிடங்களில் திமுக சார்பாகப் போட்டியிட பாலக்கரையிலுள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் விண்ணப்பங்கள் விநியோகம் நடைபெற்றது. ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்ற திமுகவினரில் பூர்த்தி செய்து ஒப்படைப்போர் அதற்கான கட்டணத்துடன் விருப்ப மனுக்களை வழங்கினர்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்கிட இன்று கடைசித் தேதியாகும். இதற்காக நேற்றும், இன்றும் 2 நாட்களும் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள் என மொத்தம் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு 5 மேஜைகளில் விண்ணப்பங்கள் விநியோகித்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று 81 பதவியிடங்களுக்கு 160 பேர் விண்ணப்பங்களைப் பெற்றனர். நிகழ்ச்சியின்போது மாநில நிர்வாகி டாக்டர் வல்லபன், மாவட்ட துணை செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நல் லதம்பி, மதியழகன், ஒன் றிய பொறுப்பாளர்கள் ஜெ கதீசன்,சோமு.மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் வெ ங்கடேசன், ரவிச்சந்திரன், சேகர் உள்ளிட்டப்பலரும் உடனிருந்தனர்.

Tags : 1st Municipal ,4th Municipal Elections ,Perambalur District ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...