×

பட்டுக்கோட்டை கரம்பயம் அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட கலந்தாய்வு கூட்டம்

பட்டுக்கோட்டை, டிச.17: பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், கரம்பயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை சிறப்பு அலுவலர் இளம்பகவத், பள்ளிக்கல்வி திட்ட சிறப்பு அலுவலர் சுதன் ஆகியோர் கலந்தாய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கான ஆயத்த நிகழ்வு குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடத்தில் கலந்தாய்வு மேற்கொண்டனர். அப்போது கல்வி உரிமை சட்டம் 2009, பள்ளி மேம்பாட்டு திட்டம், பள்ளி மேலாண்மை குழு, வெளிப்படைத்தன்மை, அரசு வழங்கும் மானியங்கள், சமூகத்தணிக்கை, பள்ளி மேலாண்மை குழுவினரது பொறுப்புகளும், கடமைகளும் ஆகியவை குறித்து ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்துவது, அவர்களின் மனரீதியான பாதிப்புகளை அகற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம், துவரங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட இல்லம் தேடி கல்வி மையங்களை இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத் பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம், மாவட்ட கல்வி ஆய்வாளர் மாதவன், பட்டுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர்கள் சிவசாமி மற்றும் மீனாசுந்தரி, பட்டுக்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அன்பரசன், இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Pattukottai Karambayam Government School ,
× RELATED பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை