×

சிதம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் டியூப் லைட் வெடித்து சிதறியது

சிதம்பரம், டிச. 16: சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அலுவலகத்தின் முதல் மாடியில் இருந்த குடிமை பொருள்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிந்து கொண்டிருந்த டியூப்லைட் திடீரென வெடித்து சிதறியது. மேலும் அதன் அருகில் இருந்த மின் விசிறியும் திடீரென பொசுங்கி கடுமையான புகை வந்தது. என்ன நடந்தது என்று தெரியாததால் பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து பதற்றத்துடன் அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மின் அழுத்த மாறுபாடு காரணமாக மின் விளக்கு வெடித்து மின்விசிறி கருகியதா, அல்லது மின் இணைப்புகளுக்கு தரமற்ற பொருட்களை பயன்படுத்தியதன் காரணமாக என தெரியவில்லை இந்த சம்பவத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தின் சில பிரிவுகளில் நேற்று பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags : Chidambaram ,Tashildar ,
× RELATED சிதம்பரம் கோயில் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம்