தென்பழஞ்சி கண்மாய் கரையை பலப்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

திருப்பரங்குன்றம், டிச. 14: திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சி கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இதன்மூலம் இங்குள்ள சுமார் 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் இக்கண்மாய் இப்பகுதியில் உள்ள 3க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கும் நீராதாரமாக விளஙகுகிறது. இந்நிலையில் தொடர் மழையால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கண்மாய் இந்த ஆண்டு நிரம்பி வருகிறது. இக்கண்மாய் கரையின் மையப்பகுதியில் உள்ள அய்யனார் கோயில் பின்புறம் உள்ள கண்மாய் கரை மற்ற இடங்களை போல் இல்லாமல் மிக குறுகியளவில் பலவீனமாக உள்ளது.

இதனால் கண்மாய் கரை உடைந்து தண்ணீர் வெளியேறும் அபாயம் நிலவி வருவதாக இப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறுகின்றனர். எனவே இக்கண்மாயில் குறுகிய நிலையில் உள்ள கரையை உடனடியாக பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: