×

கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி வாலிகண்டபுலம் வாலீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

பெரம்பலூர்,டிச.14: பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி 1008 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, கிபி 9ம் நூற்றாண்டில் பராந்த கச்சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவாரத்தை (திங்கட்கிழமை) முன்னிட்டு 1008 வலம்புரி சங்குகளால் சங்காபிஷேகம் நடந்தது. சோமவார யாக பூஜையை தொடர்ந்து பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திராவியங்களால் வாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தப்பட்டது. பூஜைகளை கோயில் குருக்கள்கள் ஜெயச்சந்திரன், குமார், செல்லப்பா ஆகி யோர் முன்னின்று நடத்தினர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர்  வெங்கட பிரியா, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் லலிதா, ஆர்டிஓ நிறைமதி, திமுக மாவட்டபொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Sankabhishekam ,Valiswarar Temple ,Valikandapulam ,Karthika ,
× RELATED வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம், லட்சதீப விழா