×

கரூர் மாவட்டத்தில் 15, 17ம் தேதிகளில் நடக்கிறது சோமாஸ்கந்தர் சிலைக்கு சிறப்பு பூஜை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.109க்கு ஏலம்

க.பரமத்தி, டிச. 14: சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.109க்கு ஏலம் போனது. கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நேற்று கொப்பரை தேங்காய்க்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 290 மூட்டை கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது.

கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.98, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.109க்கு ஏலம் போனது. கடந்த வார விலையில் மாற்றம் இல்லை. இதே போல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 14220 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.22, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.31க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட ரூ. 1 உயர்ந்து ஏலம் போனது.

Tags : Somaskandar ,Karur district ,
× RELATED ராமர் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது