×

பெரிச்சிபாளையத்தில் எம்எல்ஏ ஆய்வு

திருப்பூர், டிச.13:  திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையம் பகுதியில் நேற்று தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.திருப்பூர், தாராபுரம் ரோட்டிலுள்ள பெரிச்சிபாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் இப்பகுதி மக்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளையும் முறையாக செய்து கொடுக்காமல் இருந்தனர்.  

இந்நிலையில், நேற்று திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் உடனடியாக பிரச்னைகளை சரி செய்ய உத்தரவிட்டார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆய்வில் மாநகர பொறுப்பாளர்கள் டி.கே.டி நாகராசன், தினேஷ்குமார், நிர்வாகிகள் தம்பி குமாரசாமி, ஆதவன் முருகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : MLA ,Perichipalayam ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்