×

அரசு துறைகளில் டிஜி லாக்கர் திட்டம் விரைவில் அமல்

கோவை, டிச.13: தமிழகத்தில் அரசு துறைகள் மின் ஆளுமை மயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார் கார்டு தகவல்களை அனைத்து இதர ஆவணங்களுடன் ஒப்பிடும் வகையில் மின் ஆளுமை பணிகள் மேற்ெகாள்ளப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு, கல்வித்துறை சான்றுகள், வாக்காளர் அட்டை, பான் கார்டு, லைசென்ஸ் போன்றவற்றுடன் இணைக்க, சரி பார்க்க மின் ஆளுமை திட்டத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் அடுத்த முயற்சியாக டிஜி லாக்கர் திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. பேப்பர் பயன்பாடுகளை தவிர்த்து ஆன்லைன் முறையில் ஆவணங்கள், சான்றுகள் சரி பார்க்கப்பட்டு பணிகள் விரைவாக முடிக்க இந்த டிஜி லாக்கர் திட்டம் பயன்பாட்டிற்கு ெகாண்டு வர தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக தொழில் நுட்பத்துறையின் கடந்த மாதம் 25ம் தேதி அரசாணை எண் 35ன் படி டிஜி லாக்கர் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை பணி, வேலைவாய்ப்பு, பணி, அரசின் நலத்திட்டத்தின் மூலமாக பயன்பெறும் பயனாளிகள், இலவச திட்டங்கள் பெற்றவர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களின் விவரங்கள் டிஜி லாக்கர் திட்டத்தில் தொகுதிக்கப்படும் என தகவல் தொழில் நுட்ப துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவி அசத்தல்