×

தர்மபுரமடம் பஞ். தலைவர் திமுகவில் இணைந்தார்

தென்காசி, டிச. 11: குற்றாலத்தில்  கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் தர்மபுரமடம் ஊராட்சி மன்ற தலைவர் ரூஹன் ஜன்னத் சதாம், திமுக மாநில அமைப்பு  துணை செயலாளர் அன்பகம் கலை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர்  வக்கீல் சிவபத்மநாதன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அகமது  ஈசாக், ஆதம் சுபேர், மாரியப்பன், ஜெய்லானி மற்றும் யாக்கூப், ஆம்பூர்  மாரியப்பன், காளிமுத்து, கருணாநிதி, ராம்ராஜ், ஜெய்லானி, சேட், கோபி,  சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Dharmapuramadam Panch ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி