×

இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு கேம்பிரிட்ஜ் விருது

ஈரோடு,டிச.10:  இந்தியன் பப்ளிக் பள்ளியின் 2 மாணவர்கள் கேம்பிரிட்ஜின் சிறந்த மாணவர்களுக்கான விருது பெற்றனர்.கேம்பிரிட்ஜ் சார்பில் உலக அளவில் முதலிடம், நாட்டில் முதலிடம், உயர் சாதனை விருதுகள், பாடங்களில் முதன்மையானவர்கள் என நான்கு வகையான விருதுகள் வழங்கப்படுகிறது. கேம்பிரிட்ஜ் ஐஜிசிஎஸ்இ மற்றும் ஏஎஸ் மற்றும் ஏ லெவல் தேர்வு பாடங்களில் சாதனை  புரிந்த மாணவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. நவம்பர் 2020 மற்றும் மார்ச் 2021 தேர்வு தொடரில் சிறந்த கல்வி சாதனைகளுக்கான 177 விருதுகளில் 150 விருதுகள் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில், நவம்பர் தொடருக்கான கேம்பிரிட்ஜ் உயர் சாதனை விருதினை தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவி  குஷி பராக், நாட்டின் முதலிடத்திற்கான விருதினை ரிதிவர்ஷா ஆகியோர் பெற்று உள்ளனர். விருது பெற்ற மாணவர்களை கேம்பிரிட்ஜ் அசெஸ்மென்ட் இன்டர்நேஷனல் கல்வியின் தெற்காசிய பிராந்திய இயக்குனர் மகேஷ் வஸ்தவா,டிஐபிஎஸ் ஈரோடு நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷிவ்குமார், பள்ளி முதல்வர் ஆஷிஷ் பட்நாகர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Indian Public School ,
× RELATED பள்ளிக்கு குண்டு மிரட்டல்: டெல்லியில் பரபரப்பு