×

பள்ளிக்கு குண்டு மிரட்டல்: டெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி: தெற்கு டெல்லி சாதிக் நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளிக்கு நேற்று காலை 10.49 மணிக்கு இமெயில் மூலம் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் மோப்ப நாய்களுடன் பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவர்களையும்,ஆசிரியர்களையும் பள்ளியில் இருந்து வெளியேற்றி உள்ளனர். பின்னர் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post பள்ளிக்கு குண்டு மிரட்டல்: டெல்லியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pandemonium ,Delhi ,New Delhi ,Indian Public School ,South Delhi ,Sadiq Nagar ,
× RELATED இடைக்கால ஜாமீனை நீட்டிக்க மறுப்பு...