பண்ருட்டி வேளாண் அலுவலகத்தில் இடுபொருட்கள் குடோனில் துணை இயக்குனர் ஆய்வு

பண்ருட்டி, டிச. 6:  பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் திட்ட செயல்பாடுகள் குறித்து கடலூர் வேளாண்மை துணை இயக்குநர்(மத்தியத் திட்டங்கள்) கென்னடி ஜெபக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேசிய வேளாண்மை வளரச்சித் திட்டம், தேசிய உணவு உறுத்தியளிப்பு திட்டத்தின் கீழ் விதை வினியோகம், உயிர் உரம் விநியோகம், பசுமை காடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்குதல், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பாடுகள், ஆத்மா திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம் உள்ளிட்ட திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருள் விநியோகம், ஆன்லைன் பட்டியல்கள், பதிவேடுகள் பராமரிப்பு, இடுபொருள் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிறப்பாக திட்டங்களை செயல்படுத்த ஆலோசனை வழங்கினார். ஆத்மா திட்டத்தின் கீழ் திருவதிகை விவசாயிகளுக்கு தார் பாலின் வழங்கினார். பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநர் விஜயா, துணை வேளாண்மை அலுவலர் ராஜ்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் குமார், தங்கதுரை, சவுந்தரமேரி, கிடங்கு மேலாளர் ரத்தினவேல், ஆத்மா திட்ட உதவி மேலாளர் ராஜவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: