×

மணமேல்குடி வட்டார பகுதி விவசாயிகளுக்கு பயிர்களை தாக்கும் பூச்சி, நோய்கள் மேலாண்மை பயிற்சி

அறந்தாங்கி, டிச.5: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டாரம் கானாடு கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டத்தின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் 2021-22 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை மணமேல்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா; வனஜா தேவி கலந்து கொண்டு தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

பயிற்சியில் வம்பன் வேளாண் அறிவியியல் நிலையத்தின் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் செந்தில் குமார் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு அளவீடு முறைகள் பற்றிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மேலும் நெல், தென்னை மற்றும் இதர முக்கிய வேளாண் பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் அதை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் விளக்க படங்கள் மூலம் பயிற்சி அளித்தார். நேரடி நெல்விதைப்பில் விதை நேர்த்தியின் முக்கியத்துவம் பற்றியும், குறிப்பாக பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த பூச்சி நோய் தாக்காத எதிர்ப்பு சக்தியுடைய ரகங்களை தேர்வு செய்தல், ரசாயன உரங்களை குறைத்து பயிற்களுக்கு இயற்கை சார்ந்த தொழு உரங்கள், மண்புழு உரங்கள் பேன்றவற்றை அதிக அளவு பயன்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

அதன்பின்னர் உதவி வேளாண்மை அலுவலர் அனுகீர்த்தனா மண்வள மேலாண்மை நாள் விழா நாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மண்வளம் பற்றி கூறினார். மண் பரிசோதனை செய்வதின் நன்மைகள், மண் மாதிரிகள் சேகாக்கும் முறைகள் மற்றும் மண் மாதிரிகள் சேகரிக்கும் செயல் விளக்கம் செய்து விளக்கமளித்தார். பின்னர் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பேராசிரியர்  பதிலளித்தார்.

பயிற்சியின் முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் நன்றி உரை கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கவியரசி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Manamelkudi ,
× RELATED புதுக்கோட்டையில் சாலையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி