×

திருமருகல் ஊராட்சியில் பயிர் சேத கணக்கெடுக்கும் பணி

நாகை,டிச.5: நாகை அருகே திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். திருப்புகலூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கன மழையால் மூழ்கியுள்ள பயிர்களை வேளாண்மைதுறை மற்றும் வருவாய்துறை இணைந்து கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருவதை ஆய்வு செய்தார்.

திருப்புகலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதுக்கடை, மாதிரிமங்களம், புத்தகரம், திருப்புகலூர், கயத்தூர் ஆகிய ஊராட்சிகளின் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் நிலப்பட்டாவில் பெயர், முகவரி போன்ற திருத்தம் தொடர்பாக நடந்து வரும் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார்.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட வேதநாயக்கன் செட்டித்தெருவில் மழைநீர் வெளியேற்ற வசதியாக வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் கலெக்டர் ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் தேவி, நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன், தாசில்தார் ஜெயபால், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thirumurugal panchayat ,
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா