×

ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி சிக்கினார்

தண்டையார்பேட்டை: புளியந்தோப்பு 4வது தெருவை சேர்ந்த சபிமுகமது (21) என்பவரை, திருட்டு வழக்கில் வியாசர்பாடி போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவருக்கு வலிப்பு நோய் காரணமாக கடந்த 22ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தொடர் சிகிச்சை பெற்று வந்த சபி முகமது நேற்று மருத்துவரை பார்த்து விட்டு வரும்போது கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால், நீண்டநேரம் ஆகியும் வரவில்லை. காவலர்கள் சென்று பார்த்தபோது,  கழிவறையில் இருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.   அவரை தேடி வந்தனர். இந்நிலையில், ஜீவா ரயில் நிலைய பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து வண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். தப்பிய கைதியை 3 மணி நேரத்தில் பிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்….

The post ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Stanley ,Kandadarbate ,Vyasarbadi ,Sabihugamad ,Piliyanthopu 4th Street ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில்...